உலகம்

img

சிரியா எல்லைப் பகுதி : துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் 637 பேர் பலி

சிரியாவின் எல்லை பகுதியில் துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 637 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் குர்திஷ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை அமெரிக்கா ராணுவம் மற்றும் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படை என்ற போராளிகள் பாதுகாத்து வந்தனர். தற்போது பாதுகாப்பு பணியிலிருந்து அமெரிக்கா ராணுவம் வாபஸ் பெறுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளதை அடுத்து, சிரியா வடக்கு எல்லைப் பகுதியில் நுழைய துருக்கி திட்டமிட்டுள்ளது.

இதனால் 32 கி.மீ பாதுகாப்பு வலையம் அமைத்த துருக்கி ராணுவம், பயங்கரவாத அச்சுறுத்தலை தடுப்பதாக கூறி குர்திஷ் மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான குர்திஷ் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தாக்குதலினால் இதுவரை 637 பேர் பலியாகியுள்ளதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.  


 

;