உலகம்

img

டிரம்ப் குற்றச்சாட்டுக்கு வூகான் ஆய்வகம் மறுப்பு

நியூயார்க்:
கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வகத்திலிருந்து உலகம் முழுவதும் பரவியது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். வூகான் ஆய்வக இயக்குநர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 

ஞாயிறன்று வூகான் மாகாண ஊடகம் ஒன்றில் அவர் பேசியபோது, “இந்த வைரசை இதற்கு முன்பு நாங்கள் அறிந்ததே இல்லை, இதுகுறித்து ஆராய்ச்சியும் செய்யவில்லை, இந்த வைரஸ் இருக்கிறது என்பதுகூட எங்களுக்கு தெரியவில்லை, பிறகு எப்படி எங்கள் ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கும்? அமெரிக்கஜனாதியும் வெளியுறவுச் செயலாளர் மைக்பாம்பியோவும், கொரோனா வைரஸ் வூகான் ஆய்வகத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது என தொடர்ந்து கூறுகின்றனர். இந்த வைரஸ் இருப்பதேஎங்களுக்கு தெரியாதபோது, நாங்கள் எப்படி இதை கண்டுபிடித்திருப்போம்? என தெரிவித்துள்ளார்.

;