திங்கள், ஆகஸ்ட் 3, 2020

உலகம்

img

பாகிஸ்தான் குவுட்டா மசூதியில் குண்டுவெடிப்பு : 4 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவுட்டா மசூதியில்  குண்டு வெடிப்பு 4 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான்  மாகாணத்தில் உள்ள குவுட்டா நகரில் குச்லக் பகுதியில் உள்ள மசூதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குவுட்டா நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியானது.
குண்டுவெடிப்பு ஏற்பட்ட பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மேலும் குவுட்டா நகரில் கடந்த 4 வாரத்தில் மட்டும் 4-வது முறையாக குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;