உலகம்

img

நேபாளத்தில் ஜூலை 22 வரை ஊரடங்கு நீட்டிப்பு...  

காத்மாண்டு
இமயமலை அடிவாரத்தில் உள்ள நாடான நேபாளத்தில் கடந்த காலத்தை விட தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அங்குள்ள 77 மாவட்டங்களில் 75-இல் கொரோனா தொற்று சுழன்று வருகிறது. இதுவரை நேபாளத்தில் 13,248 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ள நிலையில், 3,134 பேர் குணமடைந்துள்ளனர். மேற்கூறப்பட்ட பட்டியலில் 90% பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள். 
இதனால் அந்நாட்டு அரசு  ஜூலை 22-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 

;