உலகம்

img

நேபாளத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்... நிலச்சரிவில் 60 பேர் பலி

காத்மண்டு
இமயமலை சாரலில் உள்ள நேபாளம் நாட்டில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து  வருகிறது. இதனால் நாட்டின் பெரும்பலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், நாட்டின் மியாக்தி மாவட்டம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  மேலும் 41 பேரை காணவில்லை.  அவர்களை தேடும் பணியில் மீட்பு மற்றும் நிவாரண பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

;