உலகம்

img

உலகிலேயே ஏழை நாடாக ஏமன் மாறும் - ஐ.நா எச்சரிக்கை

ஏமனில் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டுவரை போர் நீடித்தால், அந்நாடு உலகிலேயே ஏழை நாடாக மாறும் என்று ஐ.நா சபை எச்சரித்துள்ளது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. இந்நிலையில், ஏமனில் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டுவரை போர் நீடித்தால், அந்நாடு உலகிலேயே ஏழை நாடாக மாறும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

மேலும், போர் காரணமாக 79 சதவீதம் மக்கள் வறுமை கோட்டின் கீழ் தள்ளப்படுவார்கள். 65 சதவீதம் பேர் மிகவும் மோசமான வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏமனில், போர் காரணமாக 2014-ஆம் ஆண்டில், வறுமை நிலை 47 சதவீதம் இருந்தது, தற்போது 75 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
 

;