உலகம்

img

கொரோனா நீண்டநாள் நம்மோடு இருக்கும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நீண்ட நாள் நம்மோடு இருக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் எச்சரித்துள்ளார்.

ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோ ப்பா, மத்திய அமெரிக்கா மற் றும் தென் அமெரிக்காவில் கொரோனா பரவல் சிக்கலான நிலையிலேயே உள்ளது. அது பரவிவருகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நோயின் வீரியம் குறைந்து வரு வதாகத் தோன்றினாலும் பல நாடுகளில் பரவி வருகிறது எனக் கூறிய அவர், ஊரடங்கை தளர்த்துவதற்கு முன்னால் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா தொற்று குறித்து ஏற்கனவே ஐ.நா. எச்சரித்திருந்தது. ஜன.30-ஆம் தேதி அவசர நிலைக் காலத்தை சரியான நேரத்தில் ஐ.நா. சபை அறிவித்தது. உலகம் செயல்படுவதற்கு போதுமான கால அவகாசம் இருந்த நிலையில் மார்ச் 11-ஆம் தேதி தொற்று பரவத் தொடங்கிவிட்டது. இப்போது அமெரிக்க என்னை பொறுப்பிலிருந்து விலகுமாறு நிர்ப்பந்திக்கிறது. ஆனால், கொரோனா தொற்றுக்கு எதிராக இரவும்-பகலும் நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார்.

;