உலகம்

img

இயற்கை அழகை ரசிக்க வலம் வருவோம்! - சி.ஸ்ரீராமுலு

தமிழ்நாட்டில் சுதந்திரத்துக்கு முன்பும் காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சி களின் ஆட்சிக் காலங்களில் சின்னதும்  பெரியதுமாக 140-க்கும் மேற்பட்ட அணைகள்  கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளில் மேட்டூர்  அணை, பாபநாசம் அணை போன்றவை ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை யாகும். அமராவதி, ஆழியாறு, பரம்பிக்குளம், குந்தா, மணிமுத்தாறு, வைகை, கீழ்பவானி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், வீடுர் போன்ற அணைகள் சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட தாகும். பல அணைகள் 60 ஆண்டுகளை கடந்தும்  மிகப்பிரமாண்டமாக காட்சியளித்து வரு கின்றன. இந்த அணைகள் இன்று வரைக்கும்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவ சாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வரு கின்றன. உள்ளூர் மட்டுமன்றி வெளிமாநில பயணிகளுக்கும்  சுற்றுலா தலங்களாக சிறந்து  விளங்குகின்றன.

வறண்ட பூமியில்...

சென்னகேசவ மலைகளின் வழியாக வழிந்தோடும் பெண்ணையாறு, தென் பெண்ணையாறு நதிக்கு குறுக்காக  திரு வண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூரில் கட்டப்பட்டுள்ள சாத்த னூர் அணை வட மாவட்டங்களில் முதன்மை யானதாகும். வறண்ட மாவட்டமான திருவண்ணாமலையில் இயற்கைச் சூழல் நிறைந்த மரங்கள் மலைகளோடு ஒரு அணை  இருப்பதால் சாத்தனூர் போய் வரணும்னு ரொம்ப நாளாய் ஆசை. சமீபத்தில் திருவண்ணா மலை சென்ற போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. முப்பது கிலோ மீட்டர் பயணித்த தும் சாத்தனூர் அணையின் பிரதான நுழைவு  வாயில் நம்மை வரவேற்கிறது.

பார்க்கப்.. பார்க்க...!

அணைக்கு செல்லும் பாதையின் இருபுற மும் அழகிய பூங்காக்களும் பூத்துக்குலுங்கும்  செடிகளும் கொடிகளும் மனதை வருடு கின்றன. பச்சை பசேல் என வளர்ந்திருக்கும் மரங்கள், ஜில்லுன்னு வீசும் காற்றும் மன துக்கு இதமாக இருந்தது. ராஜா தேசிங்கு, அழகு மங்கை, குரங்கு, கரடி, ஆதாம் ஏவாள் என விதவிதமான சிமெண்ட் சிலைகள், மயில்க ளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொம்மை கள், கூண்டுகள், ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய முதலைப் பண்ணையும், மீன் வளர்ப்பு மையங்களும் சிறுவர்கள் முதல் வயது வித்தியாசமின்றி பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்க, புகைப்படம் எடுக்க, சாப்பிட, ஓய்வெடுக்க, நத்தை, பூக்கள், பல்வேறு வடிவி லான சிமெண்ட் இருக்கைகள், நடை பாதை யும் அமைக்கப்பட்டுள்ளன.

ரம்மியமாய்...

அணையின் மேல் மட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள பாதையில் நடந்து செல்லும் பொழுது  நீரின் குளிர்ச்சி காற்றோடு காற்றாய் வரவேற்கி றது. கல்வராயன் மலைக்கும், தென்மலைக் கும் இடையில் செங்கம் கணவாயை ஒட்டி அமைந்திருக்  கும் இந்த அணையை சுற்றிய பகுதிகள் அனைத்  தும் பசுமைப் பிரதேசமாக இருப்பதால்  இயற்கை அழகு ரம்மியமாகக் காட்சியளிக்கிறது.

மீன் விற்பனை...

இந்த அணையில் கட்லா, ரோகு, விரால்,  கெண்டை, கெளுத்தி என உள்ளூர் மீன்கள்  கிடைக்கின்றன. உள்ளூர் மக்களின் விற்பனைக்  கும், சுற்றுலா பயணிகளுக்கும் சூடாகச் சுடச்சுட  பொரித்த மீன், மற்றும் மீன் குழம்பும் கிடைக்கி றது. மீன்பிடி தொழிலையும் மீன் விற்பனை யையும் நம்பி இங்கு ஏராளமான குடும்பங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அதோடு  மட்டுமின்றி சிறுவர்களுக்கு தேவைப்படும் தின்பண்டங்கள் விற்கும் சிறுசிறு கடைகளும் அதிகம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் இடமாக சினிமா பிடிப்பிற்கு  ஏற்ற தலமாகவும் விளங்குகிறது. எம்ஜிஆர்-ஜெயலலிதா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்க ளின் திரைப்பட பாடல் காட்சிகளின் படப்பிடிப்புகள் இங்கே நடந்துள்ளன.

வரலாறு...

சாத்தனூர் அணை திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் நீர்ப் பாசன தேவைகளை பூர்த்தி செய்து வரு கிறது. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் இந்த  அணை கட்ட ஆரம்பித்து 1958இல் முடிக்கப்பட்டு  மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் பட்டது. தென்னிந்தியாவின் முக்கிய அணை களில் ஒன்றாகும்.  மொத்த நீர் கொள்ளளவு 119  அடியாகும். 2,583 அடி நீளமும், 143 அடி உயரமும்  கொண்டது. 700 கோடி கன அடி தண்ணீர் தேக்கி  வைக்க முடியும். பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் 33 கிலோ மீட்டருக்கு ஒரு கால்வாய் பிரிந்து  சென்று செங்கம், திருவண்ணாமலை பகுதி களுக்கு சேர்கிறது. இதனால் 16 ஆயிரத்து 700  ஏக்கர் விவசாய நிலம் பயனடைகிறது. மேலும்,  மின் உற்பத்தியும் நடைபெறுகிறது. 1903 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் ஆராய்ந்து அணை கட்டுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், அதனை அவர்க ளால் நிறைவேற்ற முடியவில்லை. 1954 ஆம்  ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டத்தில் நிதி  ஒதுக்கப்பட்டு, அணையை கட்டத் தொடங்கி னர். அன்றைய தினம் பொதுப்பணித்துறைக்கு கக்கன் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார்.  1959 ஆம் ஆண்டில் முதலமைச்சாரக இருந்த காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது என்றும்  அணையின் வரலாற்றை  விரிவாக விளக்கி னார் அதிகாரி.

திக். திக்..திக்...

நமது அடுத்த பயணம் குடியாத்தம் நகரி லிருந்து துவங்குகிறது. ஆந்திர எல்லையான பலமனேரி செல்லும் சாலை அது. இரண்டு  புறமும் மரம்,  செடிகள், பச்சை பசேலேன்று  ஓங்கி வளர்ந்த தென்னை, மா மரத் தோப்பு களோடு காடும், மலையும் வழிநெடுகிலும் கண்களுக்கு மட்டுமல்லாது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. 25 கிலோ மீட்டர் சென்ற தும் தனியாகப் பிரியும் சாலையில் நமது இரு  சக்கர வாகனம் நுழைந்தது. மிக அடர்ந்த வனத்திற்கும் மலைகளுக்கும் நடுவே பத்து  கிலோ மீட்டர் ‘திகில்’ பயணம். ஆனாலும் அடர்ந்த காட்டிற்குள் கரும் பச்சை நிறத்துடன்  ஓங்கிய மரங்களும், செடி, கொடிகளும்  ரீங்கார மிடும் ஓசைகளும், கலர் கலராக பறக்கும்  வண்ணத்து பூச்சிகளையும் பார்ப்பது கண் ணுக்கு இதமும், மனதிற்கு புத்துணர்ச்சியும் தரு கிறது. மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு கிராமம்  என இரண்டு கிராமங்கள் மட்டுமே இடையில் உள்ளன. மூன்றாவது உள்ளது மோர்தானா கிராமம்.

காக்கைக்கு தன் குஞ்சு...

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே  பாலாற்றில் கலக்கும் கவுண்டன்யா மகாநதி யில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை  தேக்கி வைக்க, ஆந்திர மாநில எல்லையோரம் தமிழகப் பகுதியான குடியாத்தம் அருகே உள்ள  இந்த மோர்தானா கிராமத்தில்  கவுண்டன்யா  மகாநதியின் குறுக்கே இரு மலைகளுக்கி டையே 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி யில் கட்டப்பட்டது மோர்தான அணை. இது சிறிய தாக இருந்தாலும் வேலூருக்கு இது தான் பெரிய அணையாகும். அணையின் முழு உயரமே 23.89 மீட்டர்தான். இதில் 11.5 மீட்டருக்கு  மட்டுமே நீரைத் தேக்கி வைக்க முடியும். இதன்  மொத்த கொள்ளளவு 262 மில்லியன் கன அடியாகும்.

எழில்மிகு....

ஆந்திர மாநிலத்திற்கு சொந்தமான புங்க னூர், பலமநேர், நாயக்கனேரி, மதனாப்பள்ளி உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் மழை பெய்தால்  அதிலிருந்து கவுண்டன்யா மகாநதியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் தமிழக எல்லை யில் உள்ள மோர்தானா அணையில்  தேக்கி வைக்கப்படுகிறது. இதில் தேங்கும் தண்ணீரை பார்ப்பதற்கும் மலை, காடுகளால் சூழப்பட்ட எழில் கொஞ்சும் அந்த அழகை ரசிப்பதற்கு உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களும் வந்து செல்கிறார்கள். பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த  அணைக்குச் செல்லும் சாலை ‘பல்லை இளிக்கிறது’. அதையும் தாண்டி சென்ற தும் ‘சோளக்காட்டு பொம்மை’ போன்று காட்சியளிக்கும் அணையின் அருகில் சென்றதும் ‘மூக்கை’ப் பிடித்துக் கொள்ள வேண்டியுள்ளது. காரணம் சுகாதாரம் என்றால் என்ன என்று கேள்வியை எழுப்புகிறது ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள்.

ஏமாற்றம்...

அணையில் இருந்து வழியும் தண்ணீர் சீரியல்  நதியாய் ஓடுவது மற்ற அணைகளில் காணமுடியாத அபூர்வ நிகழ்வாகும். ஆனாலும் தண்ணீர் இல்லாத தால் அதை பார்க்க முடியவில்லை. இந்த அணையில்  இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட ஆறு கண் கொண்ட 12 மதகுகள் உள்ளன. போதிய நீர்  இல்லாததால் மதகுகள் அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. ஆங்காங்கே குட்டை போல்  தண்ணீர் தேங்கி நிற்பதால் ஆடுமாடுகள் அதிகம்  தென்பட்டன. மோர்தானா அணை முழுமையாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கும் பொழுது ஏராளமா னோர் வந்து பார்வையிடுகின்றனர். தற்போது  நீரின்றி காட்சியளிக்கிறது.

தேவை மாற்றம்!

மோர்தானா அணை அருகிலிருந்த கிராமவாசி களிடம் மெல்ல பேசத் துவங்கியதும், “இந்தப் பகு தியை சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். வேலூர் மாவட்ட மக்களின் பொழுதுபோக்கிற்காக உள்ள ஒரே  ஒரு அணையான இங்கு சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை சுற்றுலா வந்து செல்ல பூங்காக்கள் அமைத்து சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.  தொடர்ந்து பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தங்களது கோரிக்கைகளை அடுக்கிக் கொண்டே சென்றனர்.​​​​​​​ 

;