உலகம்

img

சிகாகோவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினையும், 32ஆம் தமிழ்ப் பேரவை விழா மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்க பொன்விழா ஆகிய விழாக்களையும் ஜூலை 3 - 7 தேதிகளில் சிகாகோவில் வெகுசிறப்புடன் நடத்தின. இம்மாநாடு மற்றும் விழாக்களில் அமெரிக்காவில் வசிக்கும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், அறிஞர்கள் பங்கேற்றனர். கீழடி நம் தாய்மடி என்ற மையப்பொருளில் நடைபெற்ற அமர்வைத் துவக்கி வைத்தும், வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் தொடர்பான அமர்விலும், எதிர்கால தலைமை இளைஞர்களே என்ற இளையோர் அமர்வில் சிறப்புரை நிகழ்த்தியும் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவருமான சு.வெங்கடேசன் உரையாற்றினார். மாநாட்டில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் சார்பில் சு.வெங்கடேசன் கவுரவிக்கப்பட்டார். இந்நிகழ்வுகளில் தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழறிஞர் அ.இரா.வெங்கடாசலபதி உள்ளிட்ட தமிழறிஞர்கள், ஓவியர் மணியம் செல்வன், அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழ்ப் பேரரறிஞர் ரிச்சர்டு ஹாட், மொரீசியஸ் நாட்டின் ஜனாதிபதி பரமசிவம் வையாபுரி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஐக்கிய நாடுகள் சபையின் தூதர்  நவி பிள்ளை, கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கேரி அனந்தசங்கரி உள்ளிட்ட அறிஞர்களும், உலகம் முழுவதிலுமிருந்தும் தமிழ்ச் சான்றோர், தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;