உலகம்

img

மும்பை தாக்குதல் குற்றவாளி  அமெரிக்காவில் கைது

மும்பை,ஜூன் 21- மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தஹா வூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26 அன்று லஷ்கர்- இ-தொய்பா பயங்கரவாதி கள் நடத்திய  தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டும் போலீ சாரால் உயிரோடு பிடிக்கப் பட்டு, பின்னர்  தூக்கில் போடப் பட்டான். இந்நிலையில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பயங்கரவாதி தஹாவூர் ராணா கடந்த 10  ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்க போலீசா ரால் கைது செய்யப்பட்டார். கொரோனா தொற்றால் தனி மையில் உள்ள தஹாவூர் ராணா அப்போது விசார ணையில் போன் அல்லது காணொலிக் காட்சி மூலம் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. எனவே மும்பை வழக்கு முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான தஹாவூர் ராணாவை இந்தி யாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

;