உலகம்

img

இந்தியா- இலங்கை இடையே பயணிகள் கப்பலை இயக்கத் தயார்

சென்னை,ஆக. 14- இந்தியா -இலங்கை இடையே இயக்கப்பட்டு வந்த  பயணிகள் கப்பல் நிறுத்தப் பட்டுள்ள நிலையில் மீண்டும்  இயக்க இலங்கை தயாராக  உள்ளது என்றும் இந்தியா  தான்இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அந்நாட்டு சுற்றுலா, வனம் மற்றும் கிறிஸ் துவ விவகாரத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா கூறினார். சென்னையில் புதனன்று  (ஆக.14) இலங்கை சுற்றுலா துறை ஊக்குவிப்பு திட்டங்களை வெளியிட்டுப்பேசிய அவர், இந்தியா மற்றும் 47 நாடுகளின் வழியாக இலங்கை வரும் சுற்  றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படுகிறது என்றார்.  ஈஸ்டர் பண்டிகை குண்டு வெடிப்புக்கு பின்னர் இலங்கை அரசு குற்றவாளிகளை கைது  செய்திருப்பதாகவும் கூறி னார். இலங்கை பாதுகாப்பான நாடு என்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் இயற்கை எழில்கொஞ்சும் மலை கள், கடற்கரைகள், தேயிலைத் தோட்டங்கள், புத்தர் ஆல யங்கள் ஆகியவற்றை காண வருகை தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்தியா சுற்றுலாப்பயணி களை  ஈர்ப்பதற்காக ஹோட்டல் மற்றும் விமானக் கட்டணம் 30 முதல் 60விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இலங்கைக்கு இந்தியாவில் இருந்துதான் அதிகமான சுற்று லாப் பயணிகள் வருகை தரு கிறார்கள்.அடுத்த படியாக சீனா வில் இருந்து வருவதாக கூறிய அவர். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு வாரத்திற்கு 123 இலங்கை விமானங்கள் வந்து செல்கின்றன என்றார். வணிகத்துறை அமைச்சர்  யசந்தா டி சில்வா  தமிழ்நாடு மற்றும் கர்நாடக இலங்கை ஏர்லைன்ஸ் மேலாளர் எஸ் பி மோகன் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

;