உலகம்

img

ஒருபக்கம் கொரோனா... மறுபக்கம் நிலநடுக்கம்...   திகைப்பில் அமெரிக்கா 

இடாகோ
ஆட்கொல்லி வைரஸான கொரோனா தற்போது  அமெரிக்காவை மையம் கொண்டு அதிக சேதாரத்தை விளைவித்து வருகிறது.

அங்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 5,000-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்கத் தேசம் நிலைகுலைந்து துவண்டு போயுள்ள நிலையில், அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் புதனன்று இரவு ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் இடாகோ மாகாணம் முழுவதும் குலுங்கின. எனினும் இந்த நிலநடுக்கத்தால்பொருசேதம், உயிர்ச்சேதம் பற்றிய விரிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை.  

;