உலகம்

img

இங்கிலாந்துக்கு சென்று படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!

இங்கிலாந்துக்கு சென்று படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் வசதிக்காக, கடந்த 2012-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்ட விசா முறை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வெளிநாட்டவருக்கான கிராஜுவேட் விசா நடைமுறை கடந்த, 2012-ஆம் ஆண்டு தெரசா மே உள்துறை செயலாளராக இருந்தபோது ரத்து செய்தார். இதனால், உலக அளவில் ஏராளமான மாணவர்கள், மாணவர் விசா பெற்று வந்தவர்கள் தங்களின் பட்டப்படிப்பு காலம் முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் இருந்தது. ரத்து செய்யப்பட்ட இந்த விசா முறை, தற்போது மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் தங்கி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பு காலம் முடிந்தபின்னும், அங்கு  2 ஆண்டுகள் தங்கி தங்களுக்கு வேலையைத் தேடிக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

அதாவது, இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தபின் 2 ஆண்டுகள் பட்டமேற்படிப்பு படிக்கலாம் அல்லது வேலைக்கும் செல்லலாம். ஆனால் படிப்புக்கான காலம் முடிந்தபின்புதான், மாணவர்களுக்கு வேலை தேடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது, படிக்கும்போதே வேலை செய்ய அனுமதிக்க இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

;