உலகம்

img

கேக் சாப்பிடும் போட்டியில்  கலந்து கொண்ட பெண் பலி

ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட பெண் தொண்டையில் கேக் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம்  தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குயின்லாந்து மாகாணத்தின் ஹெர்பிபே நகரில் உள்ள  நட்சத்திர விடுதியில் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய உணவுப்பொருளான லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர்  ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கேக்குகளை சாப்பிட்டனர். அப்போது போட்டியில் கலந்து கொண்ட 60 வயது பெண் ஒருவருக்கு திடீரென தொண்டையில் கேக் சிக்கியது. அதனை தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நட்சத்திர விடுதி நிர்வாகம் உயிரிழந்த பெண்ணிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் அவரது குடும்பத்தினரும் ஆறுதல் தெரிவித்துள்ளது. 
 

;