உலகம்

img

ஆஸ்திரேலியாவில் இரு சிறிய ரக விமானம் மோதி விபத்து - 4 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் இரு சிறிய ரக விமானங்கள், நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 4 பேர் பலியாகி உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள மங்களூர் விமான நிலையத்திற்கு அருகே இன்று இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் போதி விபத்துக்குள்ளானது. இதில், இரு விமானங்களில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக விக்டோரியா  போலீசார் உறுதிப்படுத்தினர். சிவில் விமான பாதுகாப்பு ஆணையம் மற்றும் அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. இரு விமானங்களும் இரட்டை இன்ஜினுடைய பயிற்சி விமானங்கள் என்றும், இரண்டும் ஒரே பகுதியில் பறந்து கொண்டிருந்தன என்றும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
 

;