உலகம்

img

ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு- 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இன்று அதிகாலை கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
இந்த கார் குண்டுவெடிப்பு குறித்து  ஆப்கன் உள்துறை அமைச்சர் நஸரத் ரஹிமி கூறுகையில்,
காபூலில் உள்ள போலீஸார் குடியிருப்பின் 15-ஆவது மாவட்டமான குவாஸபா பகுதியில் இன்று காலை கார் குண்டு வெடித்தது. இதையடுத்து அங்கு மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர்  பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
 

;