உலகம்

img

ஜனாதிபதியை குறி வைத்த தாக்குதல் - 8 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதியை  குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை  தாக்குதலில் 8 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
ஆப்கானிஸ்தானின் பர்வான் பகுதியில் ஜனாதிபதி அஷ்ரப் கனி பங்கேற்ற நிகழ்ச்சியின்போது மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்டை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
ஆப்கானிஸ்தானில் செப்டம்பர் 28ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே 2 முறை தேர்தல் தாமதமாகி விட்டநிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் ஜனாதிபதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

;