உலகம்

img

இந்நாள் ஆகஸ்ட் 11 இதற்கு முன்னால்

1984 - ‘என் சக அமெரிக்கர்களே, (சோவி யத்) ரஷ்யாவை நிரந்தரமாகச் சட்டவிரோத மாக்கும் சட்டத்தில் நான் இன்று கையெழுத்திட்டுவிட்டேன் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், இன்னும் 5 நிமிடங்களில் (சோவியத் ரஷ்யாமீது) குண்டு வீச்சு தொடங்கும்’ என்று அமெரிக்கக் குடியரசுத் தலை வர் ரொனால்ட் ரீகன், ஒரு வானொலி உரையில் குறிப் பிட்டார். வானொலி ஒலிபரப்புக் கான உரைக்கு முன்பாக, ஒலி யளவைச் சரிசெய்வதற்காக, உரையாற்ற வேண்டியவரை, பேசிக்காட்டுமாறு கேட்பது வழக்கம். அவ்வாறான, உரைக்கு முந்தைய சோத னையின்போதுதான் (மைக் டெஸ்ட்டிங்!) ரீகன் இவ்வாறு பேசினார். அவரைப் பேசிக்காட்டு மாறு சொன்னபோதே வானொலி நிலையங்களுக்கான ஒலிபரப்புகள் தொடங்கியிருந்தது அவருக்குத் தெரி யாமற்போய்விட்டது. அந்த உரையைப் பெற்று, ஒலி பரப்புச் செய்த பெரும்பாலான வானொலி நிலையங்கள், ஒலிபரப்பின்போது இந்தப் பகுதியைத் தவிர்த்துவிட்டாலும், அவர்களிடம் ஒலிப்பதிவாக இருந்த இது வெளியே கசிந்து விட்டது. உரைக்கு முந்தைய சோதனைகளில் இவ்வாறு நகைச்சுவையாக(?) பேசுவது என்பது ரீகன் எப்போதுமே செய்வதுதான் என்று சமாதானம் சொல்லப்பட்டது. 1982இல் இவ்வாறான ஒரு வானொலி உரைக்கு முந்தைய சோதனை யில், மற்றொரு பொதுவுடைமை நாடாக அப்போது இருந்த போலந்து மக்கள் குடியரசைப் பற்றியும், ரீகன் அசிங்க மாகக் குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.

அமெரிக்க-சோவியத் பனிப்போர் உச்சத்திலிருந்த நேரத்தில், ரீகன் இவ்வாறு பேசியது, 3 நாட்களில்(ஆகஸ்ட் 14) உலகச் செய்தி யாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காமீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்காக, வடபசிஃபிக் பகுதியிலிருந்த சோவியத் போர்க்கப்பல்களை ஆயத்தமாக்குமாறு, சோவியத் படைகளின் சங்கேத செய்தி கூறியதாக, ஜப்பானிய, அமெரிக்க உளவுத்துறைகள் தெரி வித்தன. உண்மையில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்பதுடன், இதுபற்றிய கேள்விக்குப் பதிலளித்த சோவி யத் வெளியுறவுத்துறை அமைச்சர், ‘சோவியத்-அமெரிக்க உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளில் அமெரிக்காவின் விருப்பமின்மையை இது காட்டுகிறது’ என்று முடித்துக்கொண்டார். ‘ரீகனின் தனிப்பட்ட கருத்து களுக்கு வெள்ளை மாளிகை பொறுப்பாகாது, அக்கருத்து அமெரிக்காவின் ராணுவ நோக்கங்களையும் குறிக்காது’ என்று வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்தது. கேவல மான ரசனைகொண்ட, மிக மோசமான நகைச்சுவை என்று ஊடகவியலாளர்களால் ஒதுக்கப்பட்டாலும், சோவி யத்தின்மீதும், பொதுவுடைமையின்மீதும் அமெ ரிக்காவுக்கிருந்த அச்சம், நகைச்சுவை என்ற பெயரில் வெறுப்பாக வெளிப்பட்டது என்பதுதான் எதார்த்தம்!

;