உலகம்

img

அர்ஜென்டினா முன்னாள் அதிபர் பெர்னான்டோ டே லா ருவா காலமானார்

அர்ஜென்டினா நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பெர்னான்டோ டே லா ருவா இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெர்னான்டோ டே லா ருவா 1973-ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகி, பின்னர், 10-12-1999 முதல் 21-12-2001 வரை அர்ஜென்டினா நாட்டின் அதிபராக பெர்னான்டோ டே லா ருவா பதவி வகித்தார். 2016-ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கட்ட பெர்னான்டோ டே லா ருவா(81) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

;