உலகம்

img

இந்தியர்களுக்கு உணவு வழங்க மறுத்த ஒட்டலுக்கு ரூ.2.4 லட்சம் அபராதம்

அயர்லாந்தில் உள்ள பிரபல இந்திய ஓட்டலில் இந்தியர்களுக்கு உணவு வழங்க மறுத்ததால், அந்நாட்டு நீதிமன்றம் அந்த ஓட்டலுக்கு ரு.2.4 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

அயர்லாந்தில் டப்ளின் பகுதியில் ரவிஸ் கிச்சன் எனும் இந்திய ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டல் அப்பகுதியில் இந்திய உணவுக்கு புகழ்பெற்றது. இந்த ஓட்டலுக்கு அங்கு வசிக்கும் இந்தியரான மையங் பட்நாகர் என்பவர் தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களுடன் சென்றபோது, இந்தியர்களுக்கு உணவு கொடுப்பதில்லை என்று கூறி அவர்களுக்கு உணவு வழங்க மறுக்கப்பட்டது.

இந்நிலையில், மையங் பட்நாகர், அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி, உணவு கொடுக்காத அந்த ஓட்டலுக்கு 3 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.2,39,553) அபராதமும், இந்த  அபராத தொகையை மையங் பட்நாகருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
 

;