உலகம்

img

ஊபர் நிறுவனத்தில் 435 ஊழியர்கள் பணி நீக்கம்

ஊபர் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 435 ஊழியர்களை  அந்நிறுவனம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஊபர் நிறுவனத்துக்கு 5 பில்லியன் டாலர்கள் அளவில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஜூலை மாதம், அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் குழுவில் இருந்து 400 ஊழியர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில், தொடர் நஷ்டம் காரணமாக தற்போது மீண்டும் தொழில்நுட்ப (product and engineering) பிரிவில் பணிபுரியும் 435 ஊழியர்களை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள், 10 சதவீதம் பேர் ஆசியாவை சேர்ந்தவர்கள் மற்றும் 5 சதவீதம் பேர் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;