உலகம்

img

இந்தியாவுடன் வெளிப்படையான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயார் - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்தியாவுடனான வர்த்தக வேறுபாடுகளை தீர்க்க வேண்டி, வெளிப்படையான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

இந்திய- அமெரிக்க வர்த்தக கவுன்சில் நடத்திய மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய மைக் பாம்பியோ, இந்தியாவுடனான வெளிப்படையான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது. இந்திய நண்பர்கள் வர்த்தக தடைகளை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக வர்த்தக போட்டியில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 

இதை அடுத்து, வரும் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்தியாவின் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை குறித்து பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
 

;