உலகம்

img

எச்.1 பி விசா விண்ணப்பக் கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியது

வாஷிங்டன்,நவ.8- எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு  தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டி னருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது.  இந்த ‘எச்-1 பி’ விசா வழக்க மாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பின்னர் தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில், எச்.1பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.  இந்தக்கட்டணம் திரும்பபெற முடியாத கட்ட ணம் ஆகும். 

;