உலகம்

img

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தைத் தாண்டியது... 

நியூயார்க் 
உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தனது ஆட்டத்தை இன்னும் நிறைவு செய்யாமல் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் இன்னும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.

தினமும் சராசரியாக 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கையும் தாறுமாறாக இருப்பதால் அமெரிக்கா அரசு என்ன செய்வது என்பது புரியாமல் திணறி வருகிறது.  குறிப்பாகக் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 28 ஆயிரத்து 179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 16 லட்சத்து 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில்  1,418 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்தைக் கடந்துள்ளது. 

3 லட்சத்து 82 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். அமெரிக்காவின் கொரோனா பாதிப்புக்கு நியூயார்க், நியூ ஜெர்ஸி ஆகிய நகரங்கள் மட்டுமே முக்கிய தூணாக உள்ளது. இந்த 2 நகரங்களில் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டாலே அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை 60 சதவீதம் குறையும். குறிப்பாக நியூயார்க்கில் மட்டும் 3 லட்சத்து 56 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 23 ஆயிரத்து 83 பேர் பலியாகியுள்ளனர். இதே போல நியூஜெர்ஸியில் 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 

;