உலகம்

img

மூச்சு உமிழ்வில் கொரோனா வைரஸ் நிமிடத்திற்கு 1 கோடியாக அதிகரிப்பு

கொரோனா நோயாளிகளின் மூச்சு உமிழ்வில் கொரோனா வைரஸ் நிமிடத்திற்கு 1 கோடியாக அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. கொரேனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக  கருதப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கட்டுப்பாடு குறித்த ஆய்வில்  உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 
ஆரம்பத்தில் நோயாளியின் மூச்சு உமிழ்வு காற்றின் வெளியீடு அளவு, நிமிடத்திற்கு 1000 முதல் 1 லட்சம் வரையில் இருந்தது. இந்த வைரசின் அளவு தற்போது, 1 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு கோடிக்கணக்கான வைரஸ் துகள்களை வெளியேற்ற முடியும். இதன்மூலம் காற்றில் பரவுகிறது என்பதை உறுதிபடுத்தியிருப்பதாக பீக்கிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மார்ஷ் யங் யாவ் தெரிவித்துள்ளார். 
அத்துடன் நோயாளி வெளியிடும் சுவாசக்காற்றில் இருந்து வெளிவரும் வைரஸ் கிருமி, நோயின் நிலையை பொருத்து வேறுபட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு இடத்தில் வேறுவேறு நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட சுவாசக்காற்றின் மூலம், வித்தியாசத்தையும் கண்டறிந்துள்ளனர். சார்ஸ் நோய் பரவலும் காற்றின் மூலம் இருந்தது. அதன் அதிகபட்ச சுவாச உமிழ்வு விகிதம் 1 லட்சமாகவே இருந்தது. ஆனால், கொரோனா நோய் காற்றில் மிக அதிகளவு பரவுகிறது என்பதை உணர முடிகிறது என மற்றொரு ஆய்வில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் 27 கொரோனா நோயாளிகளை அறிகுறி தென்பட்ட நாள் முதல், தொடர்ந்து 14 நாட்கள் ஓரிடத்தில் வைத்து அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், 5 நோயாளிகளின் சுவாசக்காற்றில் இருந்து வைரஸ் பரவல் 1 கோடி உமிழ்வு வரை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், தொலைபேசியில் 2 பேரின் கைகள் பட்ட இடங்களில் மட்டும், கொரோனா வைரஸ் இருந்தது. மற்ற தொலைபேசி தொடுதல்களில் வைரஸ் இல்லை. 
அதேபோல், நோயாளி பயன்படுத்திய கழிவறையின் மூலம் பரவல் 16.7 சதவீதமாகவும், மருத்துவமனையின் தளங்களில் இருந்து 12.5 சதவீதமாகவும், பிற மேற்பரப்புகள் மூலம் 7.4 சதவீதமும், நோயாளிகள் தொடும் மேற்பரப்புகளில் இருந்த 4 சதவீதமும், சிகிச்சைக்காக தொடுதல்கள் மூலம் 2.6 சதவீதமும் பரவல் இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். 
காற்று, தொடுதல் மூலம் பரவுதல் முதல் இடமாகவும், அசுத்தமான மேற்பரப்புகள் உடனான தொடர்பு மூலம் பரவுதல் இரண்டாம் இடமாகவும் விளங்குகிறது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சுவாச நீர்த்துளிகள் மற்றும் அசுத்தமான இடங்களில் நேரடி தொடர்பு ஆகியவை, தற்போது கொரோனா வைரஸ் பரவலில் ஆதிக்க பகுதியாக இருக்கிறது.  காற்றின் மூலம் பரவல் இருப்பதை உறுதிப்படுத்த, 243 இடங்களில் மேற்பரப்பின் காற்றை சேகரித்து பரிசோதித்தனர். அதில், 13 இடங்களில் சேகரிக்கப்பட்ட காற்றில், கொரோனா வைரஸ் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளனர். அதனால், முகக்கவசம் அணிவதை அனைவரும் வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

;