திங்கள், ஆகஸ்ட் 3, 2020

உலகம்

img

உலகம் முழுவதும் 24 மணி நேரத்தில் 5.71 லட்சம் உயிரிழப்பு 

உலகம் முழுவதும் 24 மணி நேரத்தில் 5.71 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.  இதுவரை உலகம் முழுவதும் 13,034,955 பேர்  கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 75,81,525 பேர் குணமடைந்துள்ளனர்.  தற்போது 58,928 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 571,518 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த  24 மணி நேரத்தில் 2,30,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
அமெரிக்காவில் இதுவரை 34,13,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,37,782 உயிரிழந்துள்ளனர். இதேபோல் பிரேசிலில் 18,66,176 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 72,151பேர் உயிரிழந்துள்ளனர்.
 

;