உலகம்

img

இந்நாள் அக்டோபர் 11 இதற்கு முன்னால்

1890 - ‘அமெரிக்கப் புரட்சியின் மகள்கள்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. விடு தலைப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, நாட்டுப்  பற்றை வளர்ப்பதை நோக்கமாகக்கொண்ட இந்த அமைப்பில், அமெரிக்க விடுதலைப்போரில் பங்கேற்றவர் களின் இரத்த உறவிலுள்ள பெண்கள் மட்டுமே உறுப்பின ராக முடியும். உண்மையில், ‘அமெரிக்கப் புரட்சியின் மைந்தர்கள்’ என்ற அமைப்பு ஏற்கெனவே தொடங்கப் பட்டு செயல்பட்டுக்கொண்டிருந்தது. அமெரிக்க விடு தலைப்போரைத் தலைமையேற்று நடத்தி தளபதியும், முதல் குடியரசுத்தலைவருமான ஜார்ஜ் வாஷிங்டன் மறைவின் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகள் 1889இல் தொடங்கிய போது, நாட்டுப்பற்றை வளர்க்கும் இயக்கங்கள், விடுதலைப் போரின் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் அமைப்புகள் என்று ஏராளமான அமைப்புகள் தோன்றின.

அமெரிக்க விடுதலை அறிவிப்பின் நூற்றாண்டான 1876இலேயே ‘புரட்சி யின் மைந்தர்கள்’ என்ற அமைப்பு கலிஃபோர்னியாவில் தோன்றியிருந்தாலும்கூட, அது அமெரிக்கா முழுமைக்கும் பரவியிராத நிலையில், 1889இல்தான் ‘அமெரிக்கப் புரட்சி யின் மைந்தர்கள்’ என்ற அமெரிக்கா முழுமைக்குமான அமைப்பு உருவானது. ஆனால், அது பெண்களை உறுப்பினர்களாக அனுமதிக்க மறுத்ததைத் தொடந்து, ‘அப்படியானால் ஹன்னா ஆர்னெட்-டை எப்படி அங்கீகரிப்பது?’, என்று கேள்வியெழுப்பிய கட்டுரை வாஷிங்டன் போஸ்ட்-டில் வெளியானது. உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பளிப்பதான உத்தரவாதத்தை ஏற்று, இங்கிலாந்துக்கு விசுவாசமாக இருக்க முயன்ற தன் கணவர் உள்ளிட்ட சிலரை, அமெரிக்கப் புரட்சிப் போருக்கு எதிராகச் செயல்பட்டால் கணவரைப் பிரிந்துவிடுவதாக எச்சரித்து, புரட்சிக்கு ஆதரவாக மாற்றியவர் ஹன்னா ஆர்னெட். இந்த விவாதத்தைத் தொடர்ந்தே, பெண்களுக்கான அமைப்பாக இது தொடங்கப்பட்டது. ‘இறை, வீடு, நாடு’ என்பதை நோக்கமாகக் குறிப்பிட்டு விடுதலை தொடர்பான அருங்காட்சியகம், நூலகம், கல்வி உதவி போன்றவற்றுடன், அமெரிக்க ராணுவத்தில் செவிலியர்கள் இல்லாத அமெரிக்க-ஸ்பானியப் போர்க்காலத்தில் செவிலியர்களை அனுப்பியதுவரை சிறப்பான பணிகளில் ஈடுபட்டாலும், தங்கள் அரங்கத்தில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தக்கூட கருப்பினத்தவர்களை அனுமதிக்காமல் இவ்வமைப்பு பாகுபாடு காட்டியது.

1952இல் அது மாறினாலும், ஒரு கருப்பினத்தவர்கூட உறுப்பினராக இல்லாமலே தொடர்ந்தது. 1976இல் பேட்ச்சிலர் என்ற பெண் 26 மாதங்கள் ஆய்வு செய்து, விடுதலைப் போரில் வீரராகப் போரிட்ட வில்லியம் ஹூட் என்பவரின் மரபில் வந்தவர் என்பதை நிரூபித்து, முதல் கருப்பின உறுப்பினராக ஆனார். அதன்பின், இன, மத பாகுபாடின்றி உறுப்பினர்களைக் சேர்ப்பது என்று விதிகளை மாற்றியதுடன், கருப்பினத்தவரின் குடும்பப் பின்னணிகளை ஆய்வுசெய்து, அவர்களை உறுப்பினராக்குவதை ஓர் இயக்கமாகவே மேற்கொண்ட இவ்வமைப்பு, இன்றும் அமெரிக்கர்களின் நாட்டுப்பற்றை மேம்படுத்தும் இயக்கமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

-அறிவுக்கடல்

;