இணையம்

img

கூகுள் மேப்ஸில் இந்திய பயனர்களுக்கென பிரத்யேக அம்சங்கள்!

கூகுள் நிறுவனம் இந்திய பயனர்களுக்கென, மேப்ஸ் செயலியில் பிரத்யேக அம்சங்களை வழங்கி உள்ளது.

கடந்த மாதம் பேருந்து, நேரலை ரெயில் மற்றும் பல்வேறு இதர போக்குவரத்து வழிமுறைகள் பற்றிய விவரங்களை மேப்ஸ் செயலியில் கூகுள் வழங்கியது. இந்நிலையில், இந்திய பயனர்களுக்கென மேம்படுத்தப்பட்ட பிரத்யேக எக்ஸ்ப்ளோர் டேப், புதிய ஃபார் யு எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் டைனிங் போன்ற அம்சங்களை கூகுள் மேப்ஸ் செயலி வழங்கி உள்ளது.

எக்ஸ்ப்லோர் டேப் அம்சத்தில், ரெஸ்டாரன்ட், பெட்ரோல் பம்ப், ஏ.டி.எம்., ஆஃபர்ஸ், ஷாப்பிங், ஓட்டல் மற்றும் மருந்தகங்களை தேட முடியும். மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் மூலம் முக்கிய நகரங்களில் முன்னணி பிரிவுகளில் உள்ள வியாபார மையங்களை கூகுள் மேப்ஸ் கண்டறிந்து கொள்ளும். இந்த அம்சம் ஒவ்வொரு நகரங்களிலும் தனித்தனியாக பரிந்துரைகளை வழங்கும்.

எக்ஸ்ப்ளோர் டேபில் உள்ள புதிய ஆஃபர்ஸ் பகுதியில் சென்னை, கொல்கத்தா, கோவா, ஆமதாபாத், ஜெய்பூர், சண்டிகர், ஐதராபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள ரெஸ்டாரன்ட்களில் கிடைக்கும் சலுகைகளை பற்றி அறிந்து கொள்ளலாம். 

இதை அடுத்து, ஃபார் யு அம்சம் புதிய ரெஸ்டாரன்ட்கள், டிரெண்டிங் இடங்கள் மற்றும் ஒவ்வொருத்தர் விருப்பத்திற்கு ஏற்ற பரிந்துரைகளை வழங்கும். இது யுவர் மேட்ஸ் ஸ்கோர் பயன்படுத்தி மெஷின் லெர்னிங் மூலம் கூகுள் அறிந்திருக்கும் தகவல்களில் வைத்துக் கொண்டு நீங்கள் ஏற்கனவே சென்று வந்த இடங்களுக்கு வழங்கிய விருப்பங்கள் மற்றும் மதிப்பீடுகளை கொண்டு பரிந்துரைகளை வழங்கும். இந்த அம்சம் கொண்டு வியாபாரங்கள் சார்ந்த அப்டேட்கள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்கள் வழங்கும் சலுகைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த சேவையை வழங்குவதற்கென கூகுள் நிறுவனம் ஈசிடின்னர் எனும் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. முதற்கட்டமாக இதற்கென 4000 ரெஸ்டாரன்ட்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விரைவில் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஆஃபர்ஸ் அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
 

;