இணையம்

img

கூகுள் பிளே ஸ்டோரில் 2,000க்கும் மேற்பட்ட ஆபத்தான செயலிகள் - ஆய்வு தகவல்

கூகுள் பிளே ஸ்டோரில் 2,040 செயலிகள் போலியானது மற்றும் ஆபத்து விளைவிக்க கூடியதாக இருப்பதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய பல்வேறு செயலிகளை நீக்கிவிட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் சிஎஸ்ஐஆர்ஒ - டேட்டா61 ஆய்வாளர்கள், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 1 மில்லியன் செயலிகளை, நியூரல் நெட்வார்க் மற்றும் மெஷின் லாங்குவேஜ் கொண்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், ஒரே மாதிரியான 10,000 செயலிகளின் விவரங்கள் மற்றும் ஐகான்களை கண்டறியப்பட்டது. ஆனால், அதில் 49,608 சாத்தியமான அச்சுறுத்தல் காட்டியுள்ளது.

மேலும், வைரைஸ் டோடல் பயன்படுத்தியதில் 7,246 செயலிகள் ஆபத்து விளைவிக்க கூடியதாகவும், அதில் 2,040 செயலிகள் போலியானது மற்றும் ஆபத்து விளைவிக்க கூடியதாக இருப்பது தெரியவந்துள்ளது. இதில், பல்வேறு போலி செயலிகளை 1 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர்கள் தரவிறக்கம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

;