இணையம்

img

ஆப்பிளின் ஐபோன் 9 வெளியாவதில் சிக்கல்!

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 9 அல்லது ஐபோன் எஸ்.இ 2 வெளியீட்டில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபோன் 9 அல்லது ஐபோன் எஸ்.இ 2 என்கிற பெயரில், மார்ச் 31 ஆம் தேதி நடக்கும் ஒரு நிகழ்வில் அறிமுகம் ஆகும்  என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவில் பரவும் கரோனா வைரஸ் காரணமான கூறப்பட்ட தேதியில் அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. கரோனா வைரஸ் காரணமாக குப்பெர்டினோவை அடிப்படையாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய ஐபோன் வழங்கல் தற்காலிகமாக தடைசெய்யப்படும் என்றும், அதன் விளைவாக ஆப்பிள் நிறுவனத்தின் ஜனவரி-மார்ச் காலாண்டின் வணிகம் பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

;