இணையம்

img

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்து!

தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் செயலியில், வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் களவாடப்படும் நிலை ஏற்பட்டு, அது துரிதமாக சரி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏர்டெல் மொபைல் செயலியில் பயன்படுத்தப்படும் ஏபிஐ-யில் (API- application programming interface) இருந்த சில குறைபாடுகளை பயன்படுத்தி ஹேக்கர்கள், பயனர்களின் தகவல்களை திருட்டு ஆபத்து ஏற்பட்டது. வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களின் வாயிலாக அவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி, செல்போனின் IMEI எண் உள்ளிட்டவை திருடப்படும் வாய்ப்பு உருவானது. இந்த குளறுபடியை பெங்களூருவில் வசிக்கும் இராஸ் அகமது என்பவர் கண்டுபிடித்து, ஏர்டெல் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து தவறை சரி செய்து விட்டதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 30 கோடி ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
 

;