அறிவியல்

img

சர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவு பொருட்கள் அனுப்பிய ரஷ்யா!

சர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவு உள்ளிட்ட பொருள்களுடன் விண்கலம் ஒன்றை ரஷ்யா செலுத்தியுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்ணில் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவு உள்ளிட்ட பொருள்களுடன், விண்கலம் ஒன்றை ரஷ்யா செலுத்தியுள்ளது. 700 கிலோ எரிவாயு, 1,350 கிலோ பொருட்களுடன், 420 கிலோ விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை, சோயாஸ் எம்எஸ்-13 எனும் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் கஜகஸ்தானில் உள்ள ஏவுதலத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தை வரும் 9-ஆம் தேதி அடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

;