அறிவியல்

img

சூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை வால் நட்சத்திரம்!

சூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை வால் நட்சத்திரத்தை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

11,600 வருடங்களுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் பச்சை வால் நட்சத்திரம், கடந்த மே 13 ஆம் தேதி பூமிக்கு அருகில் பயணிக்கத் தொடங்கியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி பயணிக்கும் இந்த நட்சத்திரம், சூரிய குடும்பத்தை கடப்பதற்கு முன்பாக சூரிய ஒளியில் பிரதிபலிக்கும். பனி மற்றும் தூசுகளாலான இந்த வால் நட்சத்திரம், ஸ்வான் என்று அழைக்கப்படுகின்றது. இந்த நட்சத்திரத்தின் வால் மட்டும் 77 லட்சம் கிமீ நீளம் கொண்டுள்ளது.

இது பூமியில் இருந்து சுமார் 5.3 கோடி மைல்கள் தூரம் இருக்கும் எனவும் இந்த நட்சத்திரத்தினை மே மாத இறுதி வாரத்தில் கண்களுக்கு தெரியும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் இந்த நட்சத்திரத்தினை 5 முதல் 6 நாட்கள் வரை கண்ணாடி ஏதுமின்றி வெறும் கண்களாலேயே கண்டு மகிழலாம் என்று தெரிவித்துள்ளனர்.
 

;