அறிவியல்

img

புதன், சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு இன்று நிகழ்கிறது!

புதன் கிரகம், சூரியனை கடக்கும் அரிய வானியல் நிகழ்வு இன்று நிகழ்கிறது.

புதன் கிரகம், சூரியனை கடக்கும் அரிய நிகழ்வானது, ஒரு நூற்றாண்டில் 13 முறை நிகழும். இந்த நிகழ்வின் போது, சூரியனில் ஒரு கரும்புள்ளி போல் புதன் கிரகம் காட்சியளிக்கும். இந்த நிகழ்வு, இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி, ஐந்தரை மணி நேரம் நிகழும் என்றும், இதனை தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில், கடந்த 1999, 2003, 2006, 2016 ஆகிய ஆண்டுகளில், இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்தது. இதே போன்று, வரும் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி அன்று புதன் கிரகம், சூரியனை மீண்டும் கடக்கும் நிகழ்வை காணலாம் என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 

;