அறிவியல்

img

விண்வெளிக்குச் செல்லும் இந்திய வீரர்களுக்கு வாழ்வாதாரக்கருவிகளை வழங்குகிறது ரஷ்யா

புதுதில்லி,நவ.3- ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப் பப்படவுள்ள இந்திய விண்வெளி வீரர்களுக்கு, காற்று, நீர், உணவு உள் ளிட்டவற்றை விநியோகிக் கும் கருவிகளை ரஷ்யா வழங்கவுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் ககன்யான் திட்டம் ஆகும். 2021ஆம் ஆண்டு டிசம்பருக் குள் இத்திட்டத்தை செயல் படுத்துவதில் இந்திய விண்  வெளி ஆராய்ச்சி நிறுவனம்  (இஸ்ரோ )தீவிரம் காட்டி வரு கிறது. ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களுக்கு ரஷ்ய விண் வெளி ஆராய்ச்சி நிறுவன மான ராஸ்காஸ்மோஸ் பயிற்சி வழங்குகிறது. இதற்காக இஸ்ரோவும், ராஸ்காஸ்மோசும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந் நிலையில், ககன்யான் விண் வெளி வீரர்களுக்கு தேவை யான உபகரணங்களையும் ரஷ்யாவே வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. விண்வெளி வீரர்களுக்கு காற்று, நீர், உணவு வழங்கும் உபகரணங்கள், கழிவுகளை வெளியேற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் உடல் வெப்ப நிலையை பராம ரிக்கும் கருவிகளை ரஷ்யா வழங்குகிறது.

;