அறிவியல்

img

முதுகுவலியால் அவதிப்பட்டவருக்கு மூன்று சிறுநீரகங்கள்

பிரேசில், மே 10- கடுமையான முதுகுவலியால் பாதிக்கப்பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த 38 வயது இளைஞருக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசிலைச் சேர்ந்த அந்த இளைஞர் கடுமையான முதுகுவலியைத் தொடர்ந்து பிரேசிலின் சாவோ பாலோ நகரில் உள்ள டூ ரிம் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள், அந்த இளைஞரை பரிசோதனை செய்துள்ளனர். முதுகுப் பகுதியை சி.டி.ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது இரண்டு சிறு நீரகங்கள் அருகருகே இருந்துள்ளன. இதில் ஒரு சிறுநீரகத்திற்கு சற்று மேல் பகுதியில் முதுகெலும்புகளுக்கு இடையில் ஒரு குஷன் போன்ற பகுதியில் மற்றொரு சிறுநீரகமும் இருந்துள்ளது.

இந்தத் தகவலை தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் இதழ் வெளியிட்டுள்ளது. அந்த நபருக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏதுமில்லை. உடல் உறுப்புகள் இயல்பாகவே செயல்படுகின்றன. பொதுவாக, ஒவ்வொரு சிறுநீரகமும் சிறுநீர்ப்பையுடன் யூரிட்டர் எனப்படும் ஒற்றை குழாய் வழியாக இணைக்கப்படுகிறது. இந்த இளைஞரைப் பொறுத்தமட்டில் சிறுநீர்க் குழாய் மூலம் சிறுநீர்ப்பையுடன் நேரடியாக இணைக்கப்பட்டது. மற்றொன்று சிறுநீரகத்தின் சிறுநீர்க் குழாய் சிறுநீர்ப் பைக்குள் நுழைவதற்கு முன்பு இடதுபுறத்தில் உள்ள சிறுநீர்க்குழாயுடன் இணைந்துள்ளது. கரு வளர்ச்சியின் போதே மூன்றாவது சிறுநீரகம் உருப்பெற்றிருக்கும். இது பொதுவாக அறிகுறிகளை ஏற்படுத்தாது. தொடர்பில்லாத நோயறிதலின் மூலம் அதைக் கண்டறிந்தாலொழிய மூன்றாவது சிறுநீரகத்தை கண்டறிய முடியாது என தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் இதழ் தெரிவித்துள்ளது.

;