அறிவியல்

img

முழு சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது

நாளை (ஜூன் 2) நிகழ இருக்கும் முழு சூரிய கிரகணம், தெற்கு அமெரிக்காவின் அர்ஜெண்டினா, சிலி ஆகிய பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே காணப்படும்.

பொதுவாக சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. சூரிய கிரகணம் என்பது, சூரியனின் ஒளிக்கதிர்களை சந்திரன் மறைப்பது ஆகும். சில சூரிய கிரகணம் ஒரு பகுதி கிரகணமாக அதாவது சூரியனின் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே மறைக்கும். ஆனால் நாளை நடக்க இருக்கும் சூரிய கிரகணத்தின் போது சூரியனை முழுவதுமாக சந்திரன் மறைக்கம் என்று கூறப்படுகிறது.

நாளை நிகழ இருக்கும் முழு சூரிய கிரகணம், சிலி நாட்டில் லா செரீனா என்ற இடத்தில் அந்நாட்டு நேரப்படி மதியம் 3.22 மணிக்கு தொடங்கி மாலை 5.46 மணிக்கு முழுமையடையும். இந்திய நேரப்படி இரவு 10.24 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2.14 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. இரவாக இருப்பதால் இந்தியாவில் இதனை காண முடியாது.

குறிப்பிட்ட ஒரே இடத்தில் முழு சூரிய கிரகணம் 375 வருடங்களுக்கு ஒரு முறை தான் தோன்றும். சூரிய கிரகணம் முழுமை அடையும் காலம் 2 வினாடிகளில் இருந்து 7 நிமிடம் 30 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். 21-ஆம் நூற்றாண்டில் அதிக நேரம் தோன்றிய முழு சூரிய கிரகணம் 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் நாள் 6 நிமிடம் 39 வினாடிகளுக்கு முழுமையாக நீடித்திருந்தது. 7 நிமிடம் 24 வினாடி அளவிற்கு அதிக நேரம் நிகழும் அடுத்த முழு சூரிய கிரகணம் வருகிற 2,186-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் நாள் தோன்றும் என விஞ்ஞானிகள் கணித்து இருக்கிறார்கள்.
 

;