அறிவியல்

img

சென்னை உட்பட 8 நகரங்களில் மின்சாரப் பேருந்துகள்

சென்னை, ஆக. 9- சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநக ரங்களில் கூடிய விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடு கள் குறித்து இயக்குநர் குழு  கூட்டம் தலைமைச் செயல கத்தில் கடந்த மூன்று நாட்க ளாக நடைபெற்றது. இதில் மாநகரம், விரைவு  மற்றும் அரசு போக்குவரத்  துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் உயர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத் தில், புதிய அறிவிப்புகளை செயல்படுத்துதல், புதிய பேருந்துகளின் இயக்கம், வசூல் நிலவரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ராதா கிருஷ்ணன், “கடந்த இரண் டரை ஆண்டுகளில் ரூ. 1,160 கோடி மதிப்பில் 3 ஆயிரத்து 881 புதிய பேருந்துகள் வாங் கப்பட்டுள்ளது” என்றார். தற்போது வடிவமைக்கப் பட்டு வரும் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறும் வசதி செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மின்சாரப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக பொதுப்பணி மற்றும் மின்  சாரத் துறைகளின் அதிகாரி களோடு ஆலோசனை நடத்தி இருப்பதையும் அவர்  சுட்டிக் காட்டினார். நாடு முழுவதும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகை யில் எலக்ட்ரிக் பேருந்து களை இயக்க மத்திய அரசு  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 64 நக ரங்களில் 5595 பேருந்துகளை பயன்படுத்த மத்திய அரசு  அனுமதித்துள்ளது. இதில்  தமிழகத்துக்கு 525 பேருந்து கள் ஒதுக்கியுள்ளது. மகா ராஷ்டிராவுக்கு 725, உத்தர பிரதேசத்திற்கு 600, தில்லி யில் மெட்ரோ ரயில் நிலை யங்களை இணைக்கும் வகையில் 100 பேருந்துகளும் வழங்கப்படுகிறது. இது தவிர பெருநகரங்களில் பேருந்துகளை இயக்கும் வகையில் 400 பேருந்துகள் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை ஆகிய நக ரங்களுக்கு தலா 100 பேருந்துகளும், ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் ஆகிய நகரங்களுக்கு 50  பேருந்துகளும், தஞ்சாவூ ருக்கு 25 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது.  சென்னைக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தனியாக எலக்ட்ரிக் பேருந்துகள் விடப்படுகிறது. திருவான்மியூர்- சென்ட்ரல், கோயம்பேடு- பிராட்வே இடையே எலக்ட்ரிக் பேருந்துகள் விடப்படுகிறது. பேட்டரியில் இயங்கும்  எலக்ட்ரிக் பேருந்தின் வழித் தடத்தை கண்காணிக்கும் ஜி.பி.எஸ். வசதி, தானியங்கி கியர், தானியங்கி கதவு, தீயணைப்புப் கருவி, முதலு தவி பெட்டி, கண்காணிப்பு  கேமரா போன்றவை இருக் கும். மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர நாற்காலியுடன் பேருந்தில் ஏறுவதற்கும் இதில் வசதிகள் செய்யப் பட்டுள்ளது. 26 பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பேட்டரிகளை 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 150 கி.மீ. வரை இயக்கலாம்.

;