அறிவியல்

img

தடைகள் தாண்டி முன்னேறும் மின்சார வாகனங்கள்!

புவி வெப்பமாதல், சூழலியல் சீர்கேடு என்பது உலகை அச்சுறுத்தும் மிகப் பெரும் பிரச்ச னைகளாக உள்ளன. இதற்கெதிராக வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என பல நாடுகளும் தொடர்ந்து விவாதிப்பதும், கொள்கை முடிவு எடுத்து பசுங்கூட வாயுக்கள் எனப்படும் சூழலுக்கு கேடு விளைவிக்கும் காற்று மாசை குறைப்ப தற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் ஆங்காங்கே உள்ளூர்மட்டத்தில் ஆசிரம சாமியார்கள், தொழில் முனைவோர், சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள் என பலரும் மரங்களை நடுவது பற்றி சமீப காலமாக மிகப்பெரும் அளவு பேசி வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலும் பல லட்சம் மரக்கன்றுகள் நடப் பட்டுள்ளன என்பதும் உண்மைதான். மரக்கன்று கள் நடுவதற்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் புவி வெப்பமயமாதலை மரக்கன்று நடுவதுடன் மட்டும் புரிந்து கொள்வ தை விட மேம்போக்கானதும், அபத்தமானதும் வேறு எதுவும் இல்லை.

அரசியலுடன் பிணைந்துள்ள சூழலியல்

புவி வெப்பமயம் ஆவதும், சூழலியல் சீர்கேடும் வெறும் இயற்கை சார்ந்த பிரச்சனை கள் மட்டுமல்ல, அது உலக அரசியல், பொருளா தார நடவடிக்கையுடன் பின்னிப் பிணைந்து இருக்கிறது. இன்னும் துல்லியமாகச் சொல்வ தென்றால் “வளர்ச்சி” என்ற பெயரில் ஏகாதிபத்தி யம் முன்னெடுக்கும் அசுரத்தனமான சுரண்டல், வேட்டை நடவடிக்கைகள்தான் இயற்கைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இன்று உலக அரசியலை மேலாதிக்கம் செய்வதற்கு “எண்ணெய் அரசியல்” மிக முக்கியமான கருவி யாக உள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியமும், எண்ணெய் வள நாடுகளும் தங்கள் ஆதிக்கத் தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு பெட்ரோலிய எண்ணெய் வளத்தை முக்கியக் கருவியாகப் பயன்படுத்துகின்றன. சமீப காலமாக ஈரானை அச்சுறுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பின்னால் இந்த நோக்கம் இருப்பதை மறுக்க முடியாது. இந்த பெட்ரோலிய கச்சா எண்ணெயும், அதில் இருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களும் சூழலியல் சீர்கேட்டி லும், புவி வெப்பமயத்திலும் மிகப்பெரும் பங்கைச் செலுத்துகின்றன. உலகில் மிக அதிகமான காற்று, ஒலி மாசடைந்த 30 பெரிய நகரங்களில் 22 நக ரங்கள் இந்தியாவில்தான் உள்ளன என்பது கவ லைக்குரிய செய்தியாகும். இத்தகைய நிலையில் இந்தியர்களின் ஆயுள்கால சராசரி சுமார் இரண்ட ரை ஆண்டுகள் குறைந்திருப்பதாகவும் ஓர் ஆய்வு சொல்கிறது என திருப்பூரில் மின் கார் பயன்படுத்தும் கார்த்திகேயன், நல்லசிவம் தெரி விக்கின்றனர். உலக அளவில் மின் வாகனங்க ளின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு விப ரங்களை இவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

மாற்று ஆற்றலுக்கான தேடல்

பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக் கப்படும் புதைபடிவ எரிசக்தியான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் பயன் பாட்டைக் கட்டுப்படுத்தி ஒரு கட்டத்தில் முற்றாகக் கைவிடவும், அதற்கு மாற்று ஆற்றல் ஆதாரங்க ளை உருவாக்கவும் தீவிர முன்னெடுப்புகள் உல கெங்கும் நடைபெற்று வருகின்றன. சூழலியல் கண்ணோட்டத்தில் இது குறித்து வளர்ந்த நாடுகளில் விஞ்ஞானப்பூர்வ ஆய்வுகளும், மாற்று ஏற்பாடுகளும் முயற்சிக்கப்பட்டு வரு கின்றன. அதேசமயம் சோசலிசப் பாதையில் பயணிக்கும் மக்கள் சீனாவும் இந்த விசயத்தில் வெகுதூரம் முன்னேறி இருக்கிறது.

சூழலியல் அம்சத்தில் மட்டுமின்றி, உலகில் அமெரிக்காவின் அரசியல் மேலாதிக்கத்தைக் கடந்து தன்னைத் தக்க வைத்துக் கொண்டு முன்னேறுவதற்கும், புதிய மாற்றுத் தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து பயன்படுத்தவும் சீனா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க விசயம் சூரிய மின் ஆற்றல் தயாரிப்பும், மின் ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு போக்குவரத்து சாதனங்கள், இதர வாழ்க்கை ஆதாரக் கருவிகளை இயக்குவதும் புதிய முயற்சியாகவும், எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்பாகவும் உள்ளன. சூரிய மின்தகடுகள் உற்பத்தி, மின் வாகனங்கள் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் மிகப்பெருமளவு முன்னேறி, இன்று உலகின் முதல் நாடாக சீனாதான் உள்ளது.

மின் வாகனங்களின் நன்மைகள்

மின் பேருந்துகளை பொதுப் போக்குவரத் துக்கு அறிமுகம் செய்தால் இதில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக மின் பேருந்து களால் பசுங்கூட வாயுக்களை வெளியேற்றும் பிரச்சனை இருக்காது. பராமரிப்புச் செலவு மிகக் குறைவு, பேருந்து கட்டணம் மிகவும் குறையும், விபத்துகள் குறையும், ஒரு டீசல் பேருந்தை நிறுத்திவிட்டு மின் பேருந்தை இயக்கினாலே சராசரியாக 25 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயு உமிழ்வது நிறுத்தப்படும். இரைச்சல் அறவே இருக்காது. ஆரம்ப கட்ட முதலீட்டுச் செலவு அதிகம் - ஒரு மின் பேருந்தின் விலை டீசல் பேருந்தின் விலையை விட 2 முதல் 3 மடங்கு அதிகம் - என்பது மட்டுமே இதில் உள்ள சிரமம். அதையும் ஒரு மின் பேருந்தின் ஆயுள் காலத்தில் ஈட்டக்கூடிய வருமானம், சூழலுக்கு தீங்கு இல்லாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அதை செலவு என்று சொல்ல முடியாது. வளர்ந்த நாடுகளில் மின்சார வாகனங்க ளைப் பயன்படுத்துவது சமீப ஆண்டுகளில் வேகம் பெற்றுள்ளது. குறிப்பாக சீனாவில் சென்சின் என்ற ஒரு நகரில் மொத்தம் உள்ள 16 ஆயிரத்து 359 பேருந்துகளும் மின்சாரத்தில் இயங்கக்கூடியவை என்றால் அவர்கள் எந்த அளவுக்கு சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற னர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நார்வே உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் மின் பேருந்துகள், மின் கார்களின் அணிவகுப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மின் வாகனங்களால் கிடைக்கக்கூடிய பல்வேறு அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு கொள்கை வகுப்பாளர்கள் இது போன்ற வாக னங்களை ஊக்குவிக்கின்றனர். பொருளாதார தற்சார்பு, எரிசக்தி சுதந்திரம், புதிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசு போக்குவரத்து செலவைக் குறைப்பது, இதன் தொடர் விளைவாக மக்களுக்கு ஏற்படும் காற்று மாசு காரணமான நோய்கள் கட்டுப்படுத்தப்படு வது, ஆயுள் அதிகரிப்பது ஆகியவையே அந்த சில  அனுகூலங்கள் ஆகும். எனவேதான் தாங்கள் விரும்பாவிட்டாலும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மோட்டார் தொழில் துறை யினரும், கொள்கை வகுப்பாளர்களும் தள்ளப் பட்டுள்ளனர். பல்லாண்டு காலமாக அரசுகள் மேற்கொண்ட விடாப்பிடியான தொடர் முயற்சி மற்றும் திட்டமிட்ட கொள்கை நிலைபாடு காரணமா கவே இந்த மாற்றமும் சாத்தியமாகியுள்ளது. மின் வாகனங்களை உருவாக்கி பயன்பாட்டு க்குக் கொண்டு வருவதில் புதிய முதலீட்டா ளர்களும், கண்டுபிடிப்பாளர்களும் ஊக்கத்துடன் இறங்குவதற்கு அரசின் கொள்கை நிலை உதவியுள்ளது. குறிப்பாக மின் வாகனங்களுக்கு வரிவிலக்கு, அரசு மானியம், மின்னேற்றம் (சார்ஜிங்) செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தருவது, பெட்ரோலிய எரிபொருள் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு, மோட்டார் தொழில் துறையினர் குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து படிப்படியாக மின் வாகனங்கள் தயாரிக்க கட்டாய இலக்கு நிர்ணயித்தல், காற்று மாசு வெளியிடுதல் தொடர்பான கடுமையான சட்டவிதிமுறைகளை அமலாக்குதல், அடுத்த 10 ஆண்டு காலத்தில் பெட்ரோலிய எரிபொருள் வாகனங்களுக்கு முற்றாகத் தடை விதித்தல் போன்ற கொள்கை நிலைபாடுகள் மின் வாகனங்கள் அதிகரிப்ப தற்கு உதவியுள்ளன.

இந்தியாவின் நிலை

மின்சார பஸ், மின்சார கார், மின்சார இரு சக்கர, மூன்றுசக்கர வாகனம் என மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்கள் உலகில் பல நாடு களிலும் அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்தி யாவில் மின் வாகனங்களை பிரபலப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் இன்னும் பல தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கிறது. சமீபத்தில் மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் சில மின் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. கேரளாவில் சபரிமலைக்கு செல்வதற்கு மின் பேருந்து இயக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் டீசல் பேருந்தை இயக்குவதற்கு கிலோமீட்டருக்கு 31 ரூபாய் செலவாகிறது என்றால், மின் பேருந்தை இயக்க ஒரு கிலோமீட்டருக்கு ரூ.6 மட்டுமே செலவாகிறது. ஒப்பீட்டளவில் மின் பேருந்து மூலம் 81 சதவிகிதம் லாபம் அதிகரிக்கிறது என்பதும் தெரியவந்தது. எனினும் இந்தியா இந்த விசயத்தில் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் அடைய வில்லை. அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் மின் வாகனங்களை இயக்குவது பற்றி பேசினார். ஆனால் அது ஏட்டளவிலானதாகவே உள்ளது. மிக விரைவாக மின் வாகனங்களுக்கு மாறுவது, அந்த வாகனங்களை தயாரிப்பது என்ற நோக் கத்துடன் உருவாக்கப்பட்ட பேஃம் 1, பேஃம் 2 கொள்கை நிலைபாடுகள் உருவாக்கப்பட்டு, மின்வாகனங்களுக்கு மானியம் வழங்க வழி செய்தும் கூட முன்னேற்றம் இல்லை. 

நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் கடந்த ஜூன் 21ஆம் தேதி முக்கிய மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தினருடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இருசக்கர மற்றும் மூன்று  சக்கர வாகனத் தயாரிப்பில் மின்சார வாகனங்க ளாக மாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக 2025க்குள் 150 சிசி அளவு பெட்ரோல் வாகனங்களை முற்றாகக் கைவிடுவது, அதற்கு மாற்றாக மின் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வது என்று ஆலோசனை கூறப்பட்டது. எனினும் பெட்ரோல் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் இந்த முன்மொழிவை ஏற்காமல் அலட்சியப்படுத்தி, தவிர்ப்பதற்கே முயன்றதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.  அதேசமயம் நிதி ஆயோக் வல்லுநர் குழு மின்வாகனங்கள் தயாரிப்பில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற நிலைபாட்டில் உறுதியுடன் இருப்பதாகவும், இரு வார காலத்தில் இந்த மாற்றத் திற்கான ஒரு வரைவு அறிக்கையை வழங்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூறியுள்ளது. பெட்ரோலிய வாகன உற்பத்தியாளர்களும், எண்ணெய் நிறுவனங்களும் தங்களுக்கு உடனடி பாதிப்பு ஏற்படுத்தும் என்பதாலும், பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மோட்டார் வாகன உற்பத்தி கட்டமைப்பை கைவிட்டால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றால் மின் வாகனங்க ளுக்கு எதிரான நிலைபாடு எடுப்பார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதும், எதிர்பார்க்கக் கூடியதும் ஆகும்.

மாற்று வளர்ச்சிக்கான வாய்ப்பு

அதேசமயம் சூழலியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு உலகளாவிய அளவில் இது போன்ற மாற்றுத் திட்டங்களில் பல லட்சம் கோடி முதலீடு செய்வதற்கான எதிர்கால வாய்ப்பு உள்ளது. இதில் மின்வாகனம் தயாரிப்பு என்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். புதிய தொழில் துறை யைத் தொடங்கி ஏராளமானோருக்கு வேலை  வாய்ப்பு வழங்கக் கூடியதாகவும் இந்த துறை வரப் போகிறது. ஒரு சில மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் குறுகிய நலன்களுக்காக இந்த எதிர்கால மாற்றத்துக்கான தொழில் வாய்ப்பை நாம் வரவேற்காமல் கதவை மூடிக் கொள்ள முடி யாது. எனவே மத்திய அரசும், நிதி ஆயோக்கும் உறுதியான முறையில் கொள்கை முடிவு எடுக்காமல் மறைமுக ஆதாயம் அடையும் சிறு கூட்டத்தின் நிலைபாட்டுக்கு அடிபணியக் கூடாது.  இதற்கேற்ப காற்று மாசு பற்றி கடுமையான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும், பெட்ரோலிய எரிபொருளை பயன்படுத்தும் வாக னங்களுக்கு கார்பன் வரி விதிக்கவும் தயங்கக் கூடாது. இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மின் வாகனங்கள் உற்பத்திக்கு உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். மோட்டார் வாகன உற்பத்தித் தொழிலில் இருக்கும் பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளை மீறி இதைச் செய்யும் அரசியல் துணிவு பாஜக ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி!

கேரளத்தின் முன்முயற்சி
உலகளவில் சீனா முன்னணி வகிப்பது போல, இந்தியளவில் கம்யூனிஸ்டுகள் ஆளக்கூடிய கேரளம் இவ்விசயத்தில் முன்னோடும் பிள்ளை யாக இருக்கிறது. சபரிமலை பாதையில் மின் வாக னத்தை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்த பினராயி விஜயன் அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொச்சியில் மின் வாகனக் கண்காட்சியை நடத்தவும் ஒத்துழைத்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் கேரள சாலைகளில் 10 லட்சம் (1 மில்லியன்) மின்வாகனங்களை இயக்க இலக்கு நிர்ணயித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வல்லாதிக்க சக்திகளின் எரிபொருள் மேலா திக்க அரசியலுக்கு எதிராக, சூரிய, காற்றாலை மின்னாற்றல் போன்றவை யார் வேண்டுமானா லும் உற்பத்தி செய்து, நுகரத்தக்க மின் ஆற்ற லாக இருப்பதால் மேலாதிக்கத்துக்கு எதிரான கேடயமாக பயன்படுத்த முடியும். சூரிய, காற்று மின் ஆற்றல் உற்பத்தியிலும் ஏகபோக சக்திகள் முதலீடு செய்து தங்கள் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல்வது ஒருபுறம் இருந்தாலும், பெட்ரோலிய எரிபொருளைக் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செய்வது போல் நிச்சயம் இதை அவர்களால் கையாள முடியாது.

பொதுக் கருத்து உருவாக்கம் அவசியம்

எனவே சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மட்டுமின்றி, பொருளாதார இறையாண்மைக் கும், மக்களின் மலிவு விலை பொதுப் போக்கு வரத்து பயன்பாட்டுக்கும் “இடது பாதையில்” பய ணிக்கும் வாகனமாக மின் வாகனம் இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆகையால் உல களாவிய மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்தியா மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தா லும், அந்த மாற்றத்தை ஏற்படுத்த, ஆட்சியா ளர்களை வற்புறுத்த, மக்களின் விழிப்புணர்வும், பொதுக்கருத்து உருவாவதும் மிகவும் அவசிய மாகும்.
 


 


 


 

;