அறிவியல்

img

1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயர ராட்சத கிளியின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு

நியூசிலாந்தில், 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயரம் கொண்ட ராட்சத கிளியின் புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் ட்ரெவர் வொர்த்தி, அவருடன்  நியூசிலாந்தின் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு 1.90 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளியின் புதைபடிவங்களை கண்டெடுக்கப்பட்டது. அந்த கிளியின் உயரம் ஒரு மனிதனின் சராசரி உயரத்தின் பாதிக்கும் மேலானது ஆகும். அதாவது அந்த கிளி சுமார் 3 அடி உயரத்தில் 7 கிலோ எடையில் இருந்திருக்கும் என கூறப்படுகிறது.

கிளியின் அசாதாரண உயரம் மற்றும் வலிமையை அங்கீகரிக்கும் வகையில் அந்த கிளிக்கு ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். மேலும், அந்த கிளியின், மாதிரி படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர்.

இதுகுறித்து ட்ரெவர் வொர்த்தி கூறுகையில், “ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடசை விட பிரமாண்டமான கிளிகள் உலகில் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த கிளி இனம் வழக்கமான கிளிகளை விட அதிக உணவுகளை உட்கொண்டு வாழ்ந்திருக்கலாம். ஒருவேளை சக கிளிகளையே அது இரையாக எடுத்திருக்கலாம் என நம்பப்படுகிறது” என்றார்.
 

;