அறிவியல்

img

ஒரு மாதம் இலவச இணைய சேவை பிஎஸ்என்எல் அறிவிப்பு

புதுதில்லி, மார்ச் 21- வீட்டிலிருந்து பணி செய்வோரை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு மாதத்துக்கு இலவச பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் கார ணமாக பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு, அதன் ஊழியர்கள் தங்க ளது வீடுகளிலிருந்தே பணிகளை செய்து வருகின்றனர். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பி.எஸ். என்.எல் நிறுவனம், புதிதாக பிராட் பேண்ட் சேவை பெறுபவர்கள் மற் றும் ஏற்கெனவே லேண்ட்லைன் சேவையை பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள் ஆகியோ ருக்கு ஒரு மாதம் இலவச பிராட் பேண்ட் இணைய சேவை சலுகை யை அறிவித்துள்ளது. வாடிக்கையா ளர் சேவை மையத்துக்கு வராமல், செல்போனில் தொடர்பு கொண்டே இந்த சேவையை பெறமுடியும் என்றும் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

;