அறிவியல்

img

ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான செயல்திறன் கொண்ட கொள்கை தேவை

புதுதில்லி, பிப். 29 -  கும்பல் தாக்குதல்களிலிருந்து பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலா ளர்களைப் பாதுகாப்பதற்கான வலு வான கொள்கைகள் மற்றும் சட்டங்க ளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக சாம்டென் (ஊடகவியலாளர் பாது காப்புக்கான தெற்காசிய அமைப்பு) தெரிவித்துள்ளது.

தில்லியின் வடகிழக்கு பகுதி யில் கும்பல்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை குறித்து செய்திகளைச் சேகரிப்பதற்காகச் சென்றிருந்த நிருபர்கள்  சுடப்பட்டும், தாக்கப்பட்டும், மிரட்டப்பட்டும் உள்ள னர். சிலர் அந்தக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டு, மிரட்டப்பட்டனர். சிலர் அச்சுறுத்தப்பட்டனர். இந்து என்று தங்களை நிரூபிக்கும்படி வற் புறுத்தப்பட்டனர். இன்னும் சிலர் குத்தப்பட்டு, தடிகளால் தாக்கப்பட்ட னர். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரி கையைச் சார்ந்த பத்திரிகையாளர் ஒருவர், கல் எறிபவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற் காக ஹெல்மெட் அணியத் திட்ட மிட்டிருப்பதாகக் கூறியுள்ளார். அங்கே நடந்த வன்முறை அரசு நிர்வாகமும், காவல்துறையும் நிலை மையைக் கையாளத் தவறிய தையே வலியுறுத்திச் சொல்கிறது. 

“அடிப்படை செய்தி சேகரிப்பு கூட மிகவும் ஆபத்தான தொழிலாக மாறியுள்ளது என்பதையே தில்லி யில் நடந்திருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன” என்று சாம்டெனின் இந்திய ஒருங்கி ணைப்பாளரான  சஞ்சய் ஹசாரிகா கூறுகிறார். “ஒவ்வொரு நாளும் பத்திரிகையாளர்கள் வெளியே சென்று, தாங்கள் செய்வதை, நன்கு அறிந்ததை, தங்களைச் சுற்றி நடப்ப வற்றைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து, உலகின் பிற பகுதிகளும் அதைக் கேட்க, பார்க்க, படிக்குமாறு தருகிறார்கள்”. அவர்கள் மீது தாக்கு தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி, அவர்கள் தங்களுடைய வேலையைச் செய்வதைத் தடுப்பது ஒரு கிரிமினல் குற்றமாக மட்டு மல்ல, சுதந்திரமான பத்திரிகை தர்மத்திற்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. இந்திய அரசியலமைப் பில் பொதிந்துள்ள கருத்து சுதந்தி ரத்தை மீறுவதாகவும், செய்தி களை அறிந்து கொள்கின்ற பொது மக்களின் உரிமையை மீறுவதாக வும் இது இருக்கிறது. இவ்வாறான அச்சுறுத்தல்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள் குறித்து ஊடகவியலாளர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்ப தோடு, அவற்றை எதிர்கொள்ளும் வகையில் மனரீதியாக, உடல் ரீதி யாக தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் வேண்டியுள்ளது.

மேலும் “ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்தவும், தங்கள் வேலை யைச் செய்து வருகின்ற தொழில் முறை ஊடகங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் இந்திய அரசை, நேரடி யாக மத்திய அரசிற்கு அறிக்கை அளிக்கின்ற தில்லி காவல்துறையி னரை, தில்லி மாநில அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்” என்று ஹசாரிகா கூறினார்.  ஊடக அமைப்புகள் தங்களுக் குள் ஒற்றுமையைக் காட்ட வேண்டி யிருக்கும் அதே வேளையில், பத்திரிகைகளின் பாதுகாப்பிற்கான கொள்கைகளை உருவாக்குவதும் அவசியம் என்கிறார். சட்டப்பாது காப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டத்தின் கவசம் இல்லாமலேயே, ஊடகவி யலாளர்கள் பலரும், அவர்களது குடும்பங்களும் அதிக ஆபத்தான நிலைமையில்,மிகவும் பாதிக்கப் படக்கூடியவர்களாக இருக்கின்ற னர்.ஊடகத் தலைமைகள் ஈடுபட வேண்டிய செயலாகும்: தில்லியில் நடந்திருக்கும் சம்பவங்களும் மற்றும் பிற சம்பவங்களும் ஊடக வியலாளர்களுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவை என்பதை வலி யுறுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார்.

;