அறிவியல்

img

பின்லாந்து கடற்கரையில் காணப்பட்ட பனி முட்டைகள்!

பின்லாந்து நாட்டின் கடற்கரை பகுதியில், ஆயிரக்கணக்கான முட்டை வடிவிலான பனிக்கட்டிகள் காணப்பட்டன.

பின்லாந்துக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான போத்னியா வளைகுடாவில் உள்ள ஹைலூட்டோ தீவில் உள்ள கடற்கரை பகுதியில், முட்டை வடிவிலான பனிக்கட்டிகள் காணப்பட்டன. இந்த முட்டை வடிவ பனிக்கட்டிகள் சுமார் 30 மீட்டர் வரை பரவியிருந்தன. சிறியவை முட்டை வடிவிலும், பெரியவை கால்பந்து அளவிலும் அங்கு காணப்பட்டன. இதனை சிறிய பனிக்கட்டிகள் காற்றிலும், நீராலும் உருண்டு செல்லும் போது இவ்வாறு பனிக்கட்டிகள் வட்டவடிவில் உருவாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குளிரான பிரதேசங்களில் காற்று வீசும் போது பனிக்கட்டி பந்துகள் உருவாகும்.   பெரிய பனிப்பாளத்தில் இருந்து இவை பொதுவாக உருவாகின்றன. பின்னர் அலைகளில் பனிக்கட்டிகள் உருட்டி செல்லப்பட்டு முட்டை வடிவம் பெறுகின்றன. கடல் தண்ணீர் மீது உறைந்து பனி படரும்போது, அவை இன்னும் பெரிதாகின்றன. அவற்றின் மேற்பரப்பு மென்மையாகிறது. இதன் விளைவாக, மென்மையான பந்து வடிவான பனிக்கட்டிகள் அலைகளால் அடித்து செல்லப்பட்டு கடற்கரையோரத்தில் காணப்படுகின்றன. இதற்கு முன்னர் ரஷ்யாவிலும், சிக்காகோ அருகிலுள்ள மிச்சிகன் ஏரி உள்பட பல இடங்களில் பனிக்கட்டிகள் முட்டைகள் வடிவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

;