அறிவியல்

img

போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர்

இலக்கியத்திற்கான  நோபல் பரிசு 

ஸ்டாக்ஹோம்,அக்.10- போலந்து,ஆஸ்திரிய எழுத்தாளர் களுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்பிரட் நோப லின் நினைவாக நோபல் பரிசு ஆறு துறை களுக்கு அளிக்கப்படுகிறது.  அக்டோபர் 10 அன்று  2018, 2019 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டிற்கான இலக்கியத் திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸூக்கிற்கும்  2019 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கேவுக்கும் வழங்கப்படுகிறது. நோபல் குழுவினர் மீது எழுந்த பல்வேறு சர்ச்சைகள் காரணமாக  2018 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறி விக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

;