செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

அறிவியல்

img

செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிகட்டிகள் - நாசா கண்டு பிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் நீர்பனிக்கட்டிகள் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.
நாசா தொடர்ந்து பிற கிரகங்களில் மனிதர்கள் வாழ இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் பூமியும் செவ்வாய் கிரகங்களும் சில பண்புகளில் ஒத்து போவதால் அங்கு உயிரிகள் வாழ வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாயில் நீர் இருப்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு அங்குலத்திற்கு கீழ் நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பதை நாசா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீர்ப்பனிக்கட்டிகக் இருப்பதை செயற்கைகோள் புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன. இது தொடர்பான வரைபடங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்த நீர் பனிக்கட்டிகளை எடுக்க பெரிய அளவில் உபகரணங்கள் தேவை இல்லை. மண்வெட்டி கொண்டே வெட்டி எடுக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 

;