அறிவியல்

img

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா பாராட்டு

வாஷிங்டன்,செப்.8- சந்திரயான்- 2 விண்கலத்தை நிலவின் தென்துருவ பகுதிக்குள் தரையிறக்க முயற்சித்த இஸ்ரோ வின் சாதனைக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாசா வெளி யிட்டுள்ள செய்தியில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் நாசா விஞ்ஞானி களுக்கு புதிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது. எதிர்காலத்தில் நமது கோள்களை ஆராய்ச்சி செய்யும் பணியில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளது. இதே போன்று ஐக்கிய அரபு  அமீரகம் இஸ்ரோவுக்கு தனது  முழு ஆதரவையும் தெரி வித்துள்ளது. பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரோவின் சாதனை யை பாராட்டி அறிக்கை வெளி யிட்டுள்ளன.

;