அறிவியல்

img

மெக்சிகோவில் 60க்கும் மேற்பட்ட ராட்சத எலும்புகள் கண்டுபிடிப்பு

மெக்சிகோவில், 60க்கும் மேற்பட்ட ராட்சத எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மெக்சிகோ நகரில் விமான நிலையம் வர இருக்கும் இடத்தில், தேசிய மானிடவியல் மற்றும் வரலாற்றுக் கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு 60க்கும் மேற்பட்ட ராட்சத எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ராட்சத எலும்புகள், அழிந்த மிக பெரிய யானை இனமான மாமோத்களின் எலும்புகள் ஆகும். இந்த எலும்புகள் 15,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு, 14க்கும் மேற்பட்ட மாமோத்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

;