அறிவியல்

img

செவ்வாய்கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந்தன - ஆய்வில் தகவல்


செவ்வாய்கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந்தது  என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின்  டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் ஜியோசைன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட  கட்டுரையில்  கூறி இருப்பதாவது
செவ்வாய்கிரகத்தில்  3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கேல் க்ரேட்டர் பள்ளத்தில் உள்ள இருந்த ஏரி, 95 மைல் அகலமுள்ள ஒரு பிரம்மாண்டமான பாறைப் படுகை, இது 2012 முதல் நாசா கியூரியாசிட்டி ரோவர் மூலம் ஆராயப்பட்டு வருகிறது. சுமார் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கல் தாக்கியபோது கேல் பள்ளம் உருவானது.
செவ்வாய் கிரகம் ஒருகாலத்தில் பூமியில் இருப்பதைப்போலவே ஈரமான மற்றும் வறண்ட கட்டங்களைக் கடந்து வந்துள்ளன. கிரகத்தின் காலநிலை நீண்ட காலமாக வறண்டு போய் இருக்கிறது. காலப்போக்கில் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மெல்லியமாக மாறியதால் செவ்வாய் கிரகத்தில் திரவநீர் நிலைத்திருக்காமல் ஆவியாகியது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

;