செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

அறிவியல்

img

வங்கி பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ரோபோ!

கேரளாவில் தனியார் வங்கி ஒன்றில், பணிக்குத் தேவையான ஆட்களை ரோபோவே தேர்வு செய்து வருகிறது.

கேரளா மாநிலத்தின் கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட ஃபெடரல் வங்கியில்,  புதிய ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் முழுப் பொறுப்பும் ரோபோ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ, விண்ணப்பதாரர்களின் சுய விவரக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு ரோபோ கேள்விகளைக் கேட்கும். பலகட்ட அறிவுச் சோதனைகளை நடத்தும். ரோபோ தேர்வு முடிந்தபிறகு உளவியல் சோதனைகள், விளையாட்டு அடிப்படையிலான மதிப்பீட்டு செயல்முறைகள் நடத்தப்படும்.

ஒவ்வொரு தேர்வுக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி தேர்வு நடத்தப்படும். இதை மட்டும் உயர்மட்ட எச்.ஆர். அதிகாரிகள் நடத்துவர். எனினும் வேலைக்கான நியமன ஆணையை ரோபோவே வழங்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரின் பெற்றோருக்கும் ரோபோ தகவல் அனுப்பும்.
 

;