அறிவியல்

img

காற்று மாசுபாடு: இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை குறையும் - ஆய்வு தகவல்

காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை குறையும் என்று ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கண்டத்தில் காற்று மாசுபாடு என்பது அகால மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக மாறி வருகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், உலக அளவில் காற்று மாசுபாட்டால் ஒருவரின் ஆயுட்காலம் 3 ஆண்டுவரை குறையும் என கூறப்படுகிறது. இதில் அதிகபட்சமாக இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை  குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான உத்தரப் பிரதேசத்தில் 8 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனாவில் இது 3.9 ஆண்டுகள் வரையிலும், பாகிஸ்தானில் 3.8 ஆண்டுகள் வரையிலும், ஆப்பிரிக்க கண்டத்தில் 3.5 ஆண்டுகள் வரையிலும் ஆயுட்காலம் குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் காற்று மாசுபாட்டின் தாக்கம் குறைந்த நாடுகளாக அமெரிக்கா, மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளன. இதேபோல் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 88 லட்சம் பேர் இறப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது மலேரியாவால் இறப்பவர்களைவிட 19 மடங்கும், எய்ட்ஸால் ஏற்படும் உயிரிழப்புகளை விட 9 மடங்கும் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;